செய்திகள்

வாயு மாசடைவு அடுத்த வாரத்தில் கொழும்பில் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை

இந்தியா புதுடில்லியில் ஏற்பட்டுள்ள வாயு மாசடைவு இலங்கைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த தாக்கம் எதிர்வரும் வாரத்தில் அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது.
கடந்த சில நாட்களாக கொழும்பின் வாயு மண்டலப்பகுதி தூசி துணிக்கைகளால் நிறைந்திருந்த நிலையில் அது இன்றைய தினத்தில் சற்று குறைவடைந்துள்ளது. ஆனபோதும் எதிர்வரும் 13ஆம் திகதிக்கு பின்னர் அது மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது.
இதனால் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. -(3)