செய்திகள்

வாஸ் குணவர்தன உள்ளிட்ட 5 பேருக்கு பிணை வழங்கப்பட்டது

பம்பலப்பிட்டி பகுதியை சேர்ந்த பிரபல வர்த்தகரான மொஹமட் சியாமின் கொலை சம்பவம் தொடர்பாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன அடங்கலாக 5 பேருக்கு கொழும்பு மேல் நீதி மன்றத்தினால் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2 வருட காலமாக குறித்த கொலை வழக்கு தொடர்பாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த வாஸ்குணவர்தன மற்றும் அவரின் மகன் உள்ளிட்ட 5 பேரை பிணையில் விடுதலை செய்யுமாறு அவர் தரப்பு சட்டத்தரணிகள் இதற்கு முன்னர் பல தடவை பிணை மனு தாக்கல் செய்திருந்த போதும் அவை நீதி மன்றத்தினால் நிராகரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர்களினால் தாக்கல் செய்திருந்த மற்றுமொரு மனுவை கருத்தில் கொண்டு மேல் நீதிமன்றம் அவர்களுக்கு பிணை வழங்கியுள்ளது. இருப்பினும் சட்ட விரோத ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டு உள்ளிட்ட வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக வாஸ் குணவர்தன தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.