செய்திகள்

விக்னேஸ்வரனின் உரையை பாராட்டிய பிஸ்வால்

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கொழும்பில் இன்று நடைபெற்ற சந்திப்பின் பின்னர் வாட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுடன் பேசிய அமெரிக்காவின் உதவி வெளிவிவகாரச் செயலாளர் நிஷா பிஸ்வால் வடமாகாணத்தின் புதிய ஆளுனராக பள்ளிகக்கார நேற்று பதவி ஏற்றபோது விக்னேஸ்வரன் ஆற்றிய வரவேற்பு உரை தன்னை பெரிதும் கவர்ந்ததாக கூறினார்.

விக்னேஸ்வரனின் உரையை தான் நேற்றிரவு தொலைக்காட்சியில் பார்த்ததாகவும் அந்தஉரையில் அவர் பல விடயங்களை சிறந்த முறையில் எடுத்துரைத்திருந்ததாகவும் கூறினார்.