செய்திகள்

விசாரணையை நடத்தி தண்டனை வழங்கும் காலம் போய் தண்டனை வழங்கி விசாரணை நடத்தும் காலமே உள்ளது : மஹிந்த

வழக்கு தொடர்ந்து தண்டனை கொடுக்கும் காலம் போய் தண்டனை வழங்கியவிட்டு வழக்கு தொடரும் காலமே தற்போது காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். வாரியபொல பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்‌ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னரென்றால் வழக்கு விசாரனைகளை நடத்தி அதன் பின்னரே சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்டன. ஆனால் தற்போதைய ஆட்சியில் அப்படி நடக்கவில்லை முதலில் தண்டனை வழங்கிவிட்டு அதன்பின்னரே வழக்கு விசாரணைகளை மேற்கொள்கின்றனர். இதற்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவின் கைதை உதாரணத்துக்கு  எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.