செய்திகள்

“விதவையான கேமரா கேவிகேவி அழுகிறது” – கே.வி.ஆனந்த் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்

தமிழ் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை 3 மணியளவில் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 54.கே.வி.ஆனந்த் பல முன்னனி இயக்குனர்களின் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். மேலும் கனா கண்டேன், அயன், கோ, கவண், மாற்றான், அனேகன், காப்பான் ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். அவரது திடீர் மறைவு தமிழ் திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் கே.வி.ஆனந்தின் நண்பரும், அவருடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியவருமான கவிஞர் வைரமுத்து, தனது இரங்கலை கவிதை மூலம் வெளியிட்டுள்ளார். இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவிதையில், சிவாஜி படத்தில் தான் எழுதியா ‘வாஜி வாஜி’ பாடலை கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவு செய்த விதம் குறித்து பெருமிதமாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல பாடல்களை தனது ஒளிப்பதிவு மூலம் ரத்தினமாக மாற்றிய கே.வி.ஆனந்த் தற்போது மறைந்துவிட்டதால், விதவையான கேமரா ‘கேவிகேவி’ அழுவதாக வைரமுத்து தனது இரங்கல் கவிதையில் தெரிவித்துள்ளார்.(15)