செய்திகள்

விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்திய மூவருக்கு அபராதம்

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து விதி முறைகளை மீறிய வாகனச் சாரதிகள் மூவருக்கு அபராதம் விதித்தது மல்லாகம் நீதிமன்றம்.

யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகனச் சாரதிகள் மூவருக்கு மல்லாகம் நீதிமன்றம் நேற்று முன்தினம் 25 ஆம் திகதி வியாழக்கிழமை 20 ஆயிரம் ரூபா அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

மதுபோதையில் மோட்டார்ச் சைக்கிள் செலுத்திய புத்தூர் பகுதியைச் சேர்ந்த சாரதிக்கு 7500 ரூபா அபராதமும், மதுபோதையில் வாகனம் செலுத்திய வட்டுக்கோட்டையைச் சேர்ந்த சாரதிக்கு 7500 ரூபா அபராதமும் ஒரு வருடத்திற்குச் சாரதி அனுமதிப்பத்திர இரத்தும்,கைத் தொலைபேசியில் பேசியவாறு தனியார் பேரூந்தைச் செலுத்திய சாரதிக்கு 5 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.

மல்லாகம் நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் குறித்த சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.