செய்திகள்

வித்தியாவின்கொலையை கண்டித்து ஆசிரியர்கள் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையை கண்டித்தும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனைகளை வழங்குமாறு கோரியும் ஆசிரியர்களினால் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கொழும்பு ஆமர் வீதி சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள குறித்த ஆர்ப்பாட்டத்தில் நாடெங்கிலுமிருந்து ஆசிரியர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
மாணவியின் கொலையுடன் தொடர்புடையவர்கள் தொடர்பாக விசாரணையை துரிதப்படுத்தி அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும் , கடந்த காலங்களில் வடக்கு , கிழக்கு உட்பட நாடு பூராகவும் இடம்பெற்ற சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான  பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும் , யாழில் பொலிஸாரின் அசமந்த போக்கை கண்டித்து மக்கள் முன்னெடுத்த போராட்டத்தை கலவரமாக்கிய சூத்திரதாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தே இந்த ஆர்ப்பட்டம் நடத்தப்படவுள்ளது.