செய்திகள்

வித்தியாவின் கொலை விவகாரம் தொடர்பில் பொலிஸார் செயற்பட்ட விதம் தொடர்பாக அமைச்சர் அறிக்கை கோரியுள்ளார்

புங்குடுதீவு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையொன்றை தயாரித்து தனக்கு வழங்குமாறு அனர்த்த முகாமைத்துவம் , பொது பாதுகாப்பு மற்றும் கிருஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க பொலிஸ் மா அதிபருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மாணவியின் கொலை சம்பவத்தையடுத்து யாழ்பாண பகுதியில் ஆர்பாட்டங்கள் , நீதிமன்ற தாக்குதல் சம்பவங்கள் உட்பட பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அங்கிருந்த பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவங்களின் போது பொலிஸார் செயற்பட்ட விதம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்போது பொலிஸார் பணிகளை முறையாக செய்திருக்காவிட்டாலோ அல்லது ஏதேனும் தவறு இடம்பெற்றிருந்தாலோ அவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கப்படுமென அமைச்சர் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.