செய்திகள்

வித்தியா கொலை வழக்கின் இரண்டாம் அமர்வு இன்று

வித்தியா கொலை வழக்கின் இரண்டாம் அமர்வு இன்று திங்கட்கிழமை ஊர்காவற்துறை நீதிமன்றில் நடைபெறவிருக்கின்றது.கடந்த சில நாட்களில் பொலிசார் கொலை தொடர்பில் பல்வேறு தகவல்களை திரட்டியிருக்கும் நிலையில் இன்றைய அமர்வு முக்கியத்துவம் பெறுகிறது.

வித்தியாவின் தாய் மற்றும் அண்ணன் ஆகியோர் இன்று சாட்சியமளிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன் மரண விசாரணையும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலாவது அமர்விலே சந்தக நபர்களில் ஒருவர் தான் கொலை நடந்த சமயம் கொழும்பில் இருந்ததாகவும் தனியார் வங்கி ஒன்றின் தன்னியக்க காசு இயந்திரத்தில் பணம் எடுத்ததாகவும் தெரிவித்துள்ளதை அடுத்து அதனை உறுதிப்படுத்துவதற்கு வங்கியின் வீடியோ பதிவினை பெறுமாறு நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

வழக்கினை ஒட்டி இன்று நீதிமன்றத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.