செய்திகள்

வித்யா கொலையை கண்டித்து கல்முனையில் பூரண ஹர்த்தால் (படங்கள்)

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையினை கண்டித்தும் கொலையாளிகளுக்கு அதியுட்ச தண்டனையினை வலிறுத்தியும் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.

இதன்காரணமாக நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு ஹர்த்தாலுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையினை கண்டித்தும் கொலையாளிகளுக்கு அதி உச்ச தண்டனையினை வலிறுத்தியும் கல்முனை பிரதேச தமிழ் மாணவர்கள் அமைதியான ஆர்ப்பாட்டம் ஒன்றிணையும் முன்னெடுத்தனர்.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை மற்றும் பாண்டிருப்பு பிரதேச தமிழ் மாணவர்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தினை நடாத்தியதுடன் பிரதேச செயலாளரிம் மகஜரும் கையளிக்கப்பட்டது.

A B C F G H J K M