செய்திகள்

விபத்து – இருவர் படுங்காயம்

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவையிலிருந்து அட்டன் நோக்கி சென்ற மோட்டர் சைக்கிள் பொகவந்தலாவையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸூடன் மோதிவிபத்துக்குள்ளாகியதில் இருவர் படுங்காயமடைந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவை அட்டன் பிரதான வீதியில் நோர்வூட் தியசிரிகம பகுதியில் இவ்விபத்து இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே இவ்வாறு படுங்காயம்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவையிலிருந்து அட்டன் நோக்கி சென்ற மோட்டர் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த பஸ்ஸின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியிருப்பதாகவும் மோட்டர் சைக்கிள் சாரதியின் கவனயீனம் காரணமாக இவ்விபத்து நேர்ந்திருக்கலாம் என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

படுங்காயம்பட்ட இருவரையும் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளதாக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.