செய்திகள்

விமல் வீரன்சவுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு: 2010 ஆம் ஆண்டு சம்பவம் குறித்து விசாரணை

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவை கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சமூகமளிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவினர் அழைத்துள்ளனர். விஷேட வாக்குமூலம் ஒன்றைப் பதிவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

இன்று திங்கட்கிழமை காலை 9.50க்கு சமூகமளிக்குமாறே விமல் வீரவங்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக சமூகமளிக்குமாறே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் முஸமில் தெரிவித்தார்.