செய்திகள்

விமல் வீரவன்சவின் மனைவி கைது! மருத்துவமனையில் மறைந்திருந்தமை கண்டுபிடிப்பு!

முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்சவின் மனைவியான ஷசி வீரவங்ச கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மாலம்பே பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சொகுசு அறையில் இவர் மறைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவ சிகிச்சைக்காகவன்றி, குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் அகப்படாமல் தப்பித்துக்கொள்வதற்காகவே இவர் மருத்துவமயைில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

குறிப்பிட்ட மருத்துவமனையில் அவர் மறைந்திருப்பதை அறிந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று மாலை மருத்துவமனை அறையை சுற்றிவளைத்து அவரைக் கைது செய்தனர்.

முன்னாள் அமைச்சரின் மனைவி 2010ஆம் ஆண்டு, பொய்யான தகவல்களை கொடுத்து இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அந்த கடவுச்சீட்டு 2009ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி காலாவதியான அவரது சாதாரண கடவுச்சீட்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில் அதில் அடங்கியுள்ள தகவல்கள் வித்தியாசமானதாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.