செய்திகள்

விமான நிலையத்தில் தங்கக் கட்டிகளுடன் ஒருவர் கைது

சட்ட விரோதமான முறையில் தங்கக் கட்டிகளை இந்தியாவுக்கு கடத்த முயற்சித்த ஒருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு கோடியே 69 இலட்சம் ரூபா பெறுமதியான 3.3 கிலோ கிராம் நிறையுடைய 34 தங்க கட்டிகள் இவரிடமிருந்து மீட்கப்பட்டதாக சுங்க பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இந்தியர் ஒருவரே கைது செய்யப்பட்டதாகவும் அவர் 40 ஆயிரம் ரூபா தண்டப்பணத்துடன் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் சகல தங்கக் கட்டிகளும் அரசு உடமையாக்கப்பட்டுள்ளதாக சுங்க பேச்சாளர் தெரிவித்துள்ளார்.