செய்திகள்

விருந்துபசார நிகழ்வை நடத்திய லிந்துலை – தலவாக்கலை நகர சபைத் தலைவர் உள்ளிட்ட 7 பேர் கைது!

தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் லிந்துலை – தலவாக்கலை நகர சபைத் தலைவர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 7 பேரும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி விருந்துபசார நிகழ்வை நடத்தியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

தலவாக்கலை பகுதியில் உள்ள மண்டபம் ஒனறில் நிகழ்வு ஒன்றை நேற்று நடத்தியதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமை தலவாக்கலை பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர்.
-(3)