செய்திகள்

விரைவில் அரசியல் அமைப்பில் மாற்றம்: ரணில் தெரிவிப்பு

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி வசமுள்ள சில அதிகாரங்கள் விரைவில் இரத்து செய்யப்படும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் அரசியல் அமைப்பு பிரதான மூன்று அம்சங்களில் மாற்றம் செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதிகாரங்கள் குறைக்கப்பட்டாலும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிகாலத்தில் மாத்திரம் சில அதிகாரங்கள் அவருக்கு உள்ளவாறே வழங்கப்படும் என்றும் இதற்கு பல தரப்பினரும் இணங்கியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.