செய்திகள்

விரைவில் தேர்தல் நடக்கும் : கபீர் காசிம்

பாராளுமன்றத்தில் சிறுபான்மை பலத்தை கொண்டிருந்தாலும் நாட்டு மக்கள் ஐக்கிய தேசிய கட்சியினுடனேயே இருப்பதாகவும் இதன்படி மக்கள் அபிமானத்தை காட்ட விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்ப வேண்டுமெனவும் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் சிறுபான்மை பலத்தை கொண்டிருந்தலும் மக்கள் எம்முடனேயே இருக்கின்றனர் என்பது மே தின கூட்டத்தினூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி உண்மையான மக்கள் அபிப்பிராயத்தை காட்ட விரைவில் பொது தேர்தலக்கு செல்ல வேண்டும்.

இந்நிலையில் புதிய தேர்தல் திருத்தத்தின் கீழ் தேர்தலை நடத்த முடியாவிட்டால் பழைய முறைமையிலாவது  தேர்தல் நடத்தப்பட வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.