செய்திகள்

விரைவில் மங்கள சமரவீர அமெரிக்கா – சீனாவிற்கு பயணம்

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வெகு விரைவில் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரியவருகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உத்தியோகப பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அமைச்சர் அமெரிக்கா சென்று பின்னர் சீனாவிற்கும் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

மார்ச் மாதம் சீனாவிற்கு ஜனாதிபதி மைதிரிபாலசிறிசேன விஜயம் செய்யவுள்ள நிலையில் அது குறித்த ஏற்பாடுகளை ஆராயவும் பல்வேறு தரப்பினர்களுடன் பேச்சுக்களை நடத்தவுமே மங்கள சமரவீர சீனா செல்கின்றார்.