செய்திகள்

விரைவில் வாட்ஸ் ஆப் வலைத்தளத்தில் voice calling’ வசதி

வாட்ஸ் ஆப் வலைத்தளத்தில் voice calling’ வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

விரைவாக மெசேஜ் செய்யும் அப்ளிகேஷனில் முன்னிலையில் இருந்து வருகிறது வாட்ஸ் ஆப் (WhatsApp). அண்மையில், voice calling’ வசதிக்கான இண்டர்பேஸ் பல இணையதளங்களில் வெளியானது.

இப்போது ஸ்கைப் (Skype) மூலம் கால் செய்யும் வசதியையும் வாட்ஸ் ஆப்-ல் இணைக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளளன. தொழில்நுட்ப செய்திகளை வழங்குவதில் பிரபலமான Maktechblog இந்த தகவலை கசியவிட்டுள்ளது.

வாட்ஸ் ஆப் நவம்பர் மாத அப்டேட்டிலேயே இந்த புதிய ‘Call via Skype’ வசதிக்கான பரிந்துரை இருந்ததாக அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.  இந்நிலையில், அழைப்பை நிறுத்தி வைக்கும் கால் ஹோல்டு வசதி, உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இதில் இடம்பெற உள்ளதாகக் கூறப்படுகிறது.

அழைப்புப் பதிவுகளுக்கான (Call logs) களுக்காக தனித்தனியே ஸ்கீரின்களும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், வாகனங்களை ஓட்டிக் கொண்டிருக்கும் போது குறுஞ்செய்தி (message) மற்றும் அழைப்புகளைப் படிப்பதற்கு வசதியாக டிரைவிங் மோட் மற்றும் தொந்தரவு செய்யவேண்டாம் என்னும் வசதியும் விரைவில் வாட்ஸ் ஆப் – ல் வெளிவர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.