செய்திகள்

வில்பத்துவில் காடுகள் அழிக்கப்படுவது தொடர்பாக விசாரணை நடத்த ஜனாதிபதி தீர்மானம்

வில்பத்து சரணாலய பகுதியில் இடம்பெறும் காடழிப்பு செயற்பாடுகள் தொடர்பாக விசாரணை நடத்தவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பாக ஆராயுமாறு ஜனாதிபதி சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
வில்பத்து சரணாலய பகுதியில் காடுகளை அழித்து கட்டிடங்கள் அமைக்கப்படுவதாக மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளையடுத்தே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.