செய்திகள்

விளக்க மறியலுக்கு செல்லும் அரசியல்வாதிகள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவது ஏன்? எரான் விக்கிரமரட்ன

ஏதேனும் சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுடன் கைது செய்யப்பட்டு விளக்க மறியலுக்கு கொண்டு செல்லப்படும் அரசியல்வாதிகள் அடங்கலாக முக்கியஸ்தர்கள் மறியலுக்கு கொண்ட செல்லப்படாது சிறைச்சாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வது நியாயமற்றதென முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்.
நேற்று  கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் நிதி மோசடி குற்றசாட்டில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமை தொடர்பாக  ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நீரிழிவு , இரத்த அழுத்தம் என பல்வேறு நோய்களை காட்டி இவ்வாறான முக்கியஸ்தர்களை மறியலில் வைக்காது வைத்தியசாலைக்கு அனுப்பினாலும் , குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகும் சாதாரண மக்களுக்க இந்த நோய்கள் இருந்தாலும் அவர்களுக்கு இந்த சலுகை கிடைக்காது. இது சாதாரண மக்களுக்க செய்யும் அநீதியே என அவர் தெரிவித்துள்ளார்.