செய்திகள்

விவாகப் பதிவு கட்டணம் 1000 ரூபாவாக குறைகின்றது.

விவாக பதிவு கட்டணத்தை 5000 ரூபாவிலிருந்து 1000ரூபா வரை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளது. இதன்படி விவாக பதிவு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இடைக்கால வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள யோசணைக்கமைய விவாக பதிவு கட்டணத்தை குறைப்பதற்காக உள்நாட்டு அலுவலல்கள் அமைச்சர் கௌரவ ஜோசப் மைக்கல் பெரேராவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதன்படி தற்போது காணப்படும் 5000 ரூபா என்ற கட்டணத்தை 1000 ரூபாவாக குறைப்பதற்கான திருத்தம் 2015.03.16 அன்று முதல்  அமுலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்படவுள்ளது. என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.