செய்திகள்

விவேக் மறைவு… கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்திய பிரபலங்கள் – புகைப்படத் தொகுப்பு

நடிகர் விவேக்கின் உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது, திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி உள்ளனர்.தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவிற்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தி உள்ளனர். அதன் தொகுப்பை காணலாம்.(15)