செய்திகள்

விஷால், சூர்யாவை தொடர்ந்து டுவிட்டரில் இணைந்த அட்டகத்தி தினேஷ்

தற்போது உள்ள நடிகர், நடிகைகள் தங்களின் புகைப்படங்கள் மற்றும் மகிழ்ச்சியான விஷயங்களை ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களின் எண்ணங்களையும் தெரிந்துக் கொள்கின்றனர்.

இதற்காக நிறைய நடிகர்கள் பேஸ்புக் மற்றும் டுவிட்டர்களில் இணைந்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு சூர்யா டுவிட்டரில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து விஷால் சமீபத்தில் இணைந்தார். அந்த வரிசையில் தற்போது அட்டகத்தி தினேஷும் இணைந்திருக்கிறார்.

இவர் ‘அட்டகத்தி’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டது. இப்படத்தை தொடர்ந்து ‘குக்கூ’, ‘திருடன் போலீஸ்’, சமீபத்தில் வெளியான ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தினேஷ் நடிப்பில் ‘வாராயோ வெண்ணிலாவே’, ‘விசாரணை’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது.