செய்திகள்

வீட்டின் முன்பகுதியில் வைக்கப்பட்ட இரசாயன ஆயுதம் காரணமாகவே ரஸ்ய இரட்டை உளவாளி பாதிக்கப்பட்டார்- அதிகாரிகள் தகவல்

பிரிட்டனில் ரஸ்யா இரட்டை உளவாளி தங்கியிருந்த வீட்டின் முன்பகுதியில் நரம்புகளை தாக்ககூடிய இரசாயன ஆயுதத்தை இனந்தெரியாதவர்கள் வைத்து சென்றுள்ளனர் என தெரிவித்துள்ள பிரிட்டனின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் குறிப்பிட்ட இரசாயன ஆயுதத்தின் காரணமாகவே உளவாளி பாதிக்கப்பட்டார் எனவும் தெரிவித்துள்ளனர்.
சலிஸ்பரி நகரில் ஸ்கிரிபல்ஸ் தங்கியிருந்த வீட்டின் முன்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரசாயன ஆயுதத்தினாலேயே அவர் முதன்முதலில் பாதிக்கப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவரின் வீட்டின் முன்வாயில் நேர்வ் ஏஜன்டின் பெருமளவு தாக்கம் காணப்படுவதை விசேட நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்கிரிபல்சும் அவரது மகளும் சலிபஸ்பரி நகரின் பொதுமக்கள் நடமாடும் பகுதியொன்றில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட பின்னர் இதுவரை சுயநினைவற்றவர்களாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் நிரந்தர மூளை பாதிப்பிற்கு உட்பட்டிருக்கலாம் என பிரிட்டனின் நீதிபதியொருவர் தெரிவித்துள்ளார்.