செய்திகள்

வீட்டுச் சிறையில் இருந்து குட்டி மானை மீட்ட பொலிஸார் (படங்கள்)

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் எல்படை தோட்ட பகுதியில் குறித்த ஒரு நபர் வீட்டில் மான் குட்டி ஒன்று கூட்டினுள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் 29.04.2015 அன்று நோர்வூட் பொலிஸார் குறித்த மானை மீட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து விசாரணைக்குட்படுத்தும் போது மான் கூட்டினுள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இருந்தது தெரியவந்துள்ளது.

அதனையடுத்து சந்தேக நபரை நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேற்படி மானை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்த சந்தேக நபரை அட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

DSC00014

DSC00010

DSC00009