செய்திகள்

வீதிகளில் விதிமுறை மீறி வாகனங்களை செலுத்துவோர் மீது கடும் நடவடிக்கை! பொலிஸார் அறிவிப்பு

வீதிகளில் விதிமுறை மீறி வாகனங்களை செலுத்துவோர் மீது பொலிஸார் கடும் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பிலுள்ள சில பிரதான வீதிகளில் இனறு முதல் வீதி விதிமுறை தொடர்பிலான இந்த பரிட்சார்த்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.

இன்று காலை 7.30 மணிமுதல் ஏப்ரல் 10 ஆம் திகதி மாலை வரை இந்த பரிட்சார்த்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.​

இதற்கமைய மொரட்டுவை தொடக்கம் காலி வீதி ஊடாக காலிமுகத்திடல் சுற்றுவட்டம் வரையும், கொள்ளுபிட்டி தொடக்கம் பம்பலப்பிட்டி வரையும், பொரளை சேனாநாயக்க சந்தியிலிருந்து ஸ்ரீ ஜயவர்தனபுர வீதியில் பொல்துவ வரையிலும் இந்த பரிட்சார்த்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இதற்கு மேலதிகமா பேலியகொட இருந்து கண்டி வீதியில் கிரிபத்கொட வரையிலும் பேலியகொடயில் இருந்து நீர்கொழும்பு வீதி வத்தளை வரையிலும் இந்த பரிட்சார்த்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

இதனால் இன்று முதல் சாரதிகள் விதிமுறைக்கு அமைய வாகனங்களை செலுத்துவது கட்டாயம் எனவும் கவனக்குறைவுடன் வாகனங்களை செலுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.