செய்திகள்

வெடிகுண்டு மிரட்டல்: அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்தோனேசிய விமானம்

இந்தோனேசிய விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து. அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

லயன் குழுமம் என்ற நிறுவனத்தின் பட்டிக் விமானம் 125 பயணிகளுடன் அந்நாட்டின் அம்போன் நகரில் இருந்து ஜகார்த்தா நோக்கி பறந்து கொண்டிருந்தது. அப்போது அம்போனில் உள்ள விமான கட்டுப்பாட்டு அறைக்கு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் பட்டிக் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து விமானம் அவசர அவசரமாக தெற்கு சுலவேசியின் மகஸ்ஸார் நகரில் உள்ள சுல்தான் ஹசானுதீன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

பயணிகள் அனைவரும் உடனடியாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதன் பின் வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தை சோதனை செய்ததில் வெடிகுண்டு எதுவும் இல்லாதது தெரியவந்தது. இதனால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என கருதப்படுகிறது.