செய்திகள்

வெற்றிலை துப்பினால் கைது! கொழும்பு மாநகர சபை எச்சரிக்கை

கொழும்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் வெற்றிலையை மென்று துப்புபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு மாநகர சபை பிரதான பொது வைத்திய அதிகாரி லுவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

வெள்ளைக்காரர்கள் ஆட்சி செய்த காலத்தில் நகரப் பகுதிக்குள் துப்பினால் ஐந்து ரூபா தண்டப் பணம் செலுத்த வேண்டும் என்ற சட்டம் இருந்தாலும் தற்போது அந்த தண்டப் பணத்தின் தொகை மாற்றப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

நகரப் பகுதிகளில் நெருக்கமான முறையில் மக்கள் செயற்படுவதால் உமிழ் நீர் துப்பும் போது பல்வேறுபட்ட நோய்கள் மிக விரைவாக தொற்றக் கூடிய சாத்தியங்கள் அதிகமாக காணப்படுவதாக தெரிவித்த வைத்திய அதிகாரி, இன்னும் இரண்டு நாட்களுக்குள் துப்புபவர்களை கைது செய்வதற்கான குழுக்களை நியமிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.