செய்திகள்

வெல்லப் போவது யார்? தீர்மானமிக்க போட்டி இன்று

சுதந்திர வெற்றிக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரில் இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான தீர்மானமிக்க போட்டி இன்று இரவு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறும்.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும்.
போட்டி பற்றி விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.
இதில் கருத்து வெளியிட்ட இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்ஹ, பந்து வீச்சுத் துறையில் மாற்றத்தை மேற்கொள்ளப் போவதாக கூறினார். -(3)