செய்திகள்

வெளிநாட்டிலுள்ள கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பில் சட்டம் இயற்றப்படுகின்றது – எம்.ஏ.சுமந்திரன்

வெளிநாட்டிலுள்ள கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பில் சட்டம் இயற்றப்படுகின்றதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.எனினும் கறுப்பு பணத்தை யார் கொண்டு வரப்போகின்றார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.மேலும் இந்த விடயத்தை சவாலுக்கு உட்படுத்த பல மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். கறுப்பு பணத்தினை வெள்ளயடிக்கும் பொறிமுறையும் மேற்கொள்ளப்படுகின்றது என மேலும் தெரிவித்துள்ளார்.

நிதி சட்டத்தை திருத்துவதற்கான ஒரு சட்டமூலம் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதாவது வெளிநாட்டில் உள்ள கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வருவது தொடர்பாக சட்டமொன்றினை இயற்றுவதற்கு நிதியமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.இன்று வெள்ளிக்கிழமை மாளிகைக்காடு அந்நூர் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற மீனவர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.(15)