செய்திகள்

வெளிநாட்டு தேர்தல் கண்கானிப்பாளர்களை அழைத்து வர நடவடிக்கை

ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் போது  கண்கானிப்பு நடவடிக்கைகளுக்கென வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறைந்தது 50 வெளிநாட்டு  கண்காணிப்பாளர்களையாவது இம்முறை தேர்தலுக்காக அழைக்க எதிர்பார்த்துள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
தாய்லாந்தின் சுதந்திரமான தேர்தலுக்கான ஆசிய வலையமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய அமைப்புக்களில் இருந்து தேர்தல் கண்காணிப்பாளர்களை அழைக்கவுள்ளதாக, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொதுத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் தேசிய ஜனநாயக நிறுவனம் மற்றும் வேறு சில அமெரிக்க நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.