செய்திகள்

வேறு கட்சிகளுக்கு உதவும் வகையில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டாம் : தேர்தல்கள் செயலகம்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யும் போது தேர்தலில் போட்டியிடும் நோக்கம் இன்றி வேறு கட்சிக்கு அல்லது யாரேனும் வேட்பாளருக்கு உதவும் நோக்கத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறு தேர்தல்கள் செயலகம் கட்சிகள் மற்றும் சுயேற்சைக் குழுக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
விசேட அறிக்கையொன்றினூடாகவே  தேர்தல்கள் செயலகம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யும் சில கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் தாம் போட்டியிடாது வேறு கட்சி அல்லது வேட்பாரை வெற்றிப்பெற செய்வதற்காக பிரசார அலுவலகங்களை அமைக்கும் நோக்கிலும் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு வேறு கட்சிகளுக்காக தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி வைக்கும் நோக்கிலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். இதனை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக தேர்தல்கள் செயலகம் அந்த அறிக்கையினூடாக தெரிவித்துள்ளது.