செய்திகள்

வேலைவாய்ப்புகளை எதிர்பார்க்கும் இளைஞர், யுவதிகளுக்கான அறிவித்தல்

தொழில்வாய்ப்புக்களை எதிர்பார்த்துள்ள இளைஞர் யுவதிகள் மாவட்ட செயலகங்களின் கீழ் உள்ள மாவட்ட தொழில் கேந்திர மையங்களில் தம்மைப் பதிவு செய்துகொள்ளுமாறு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளதாக அரசாங்க செய்தித் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சின் கீழ் இயங்கும் மனித வள மற்றும் தொழில் பாதுகாப்புத் திணைக்களம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. இதற்காக www.dome.gov.lk என்ற இணையதள முகவரியின் கீழ் தம்மைப் பதிவு செய்து கொள்ள முடியும் என்று குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது. -(3)