செய்திகள்

வோர்னர்-ரொஜெர் ஜோடி முதலாவது விக்கெட்டிற்கு அபாரம்- 201 ஓட்டங்களை பெற்றனர்

டேவிட் வோர்னர் ரொஜெர் ஜோடி முதலாவது விக்கெட்டிற்காக பெற்ற 201 ஓட்டங்கள் காரணமாக நான்காவது டெஸ்டின் முதல் நாள் ஆட்டமுடிவில் அவுஸ்திரேலிய அணி 2 விக்கட்களை மாத்திரம் இழந்து 348 ஓட்டங்களை பெற்றுள்ளது.
சிட்னியில் இன்று ஆரம்பமான நான்காவதும். இறுதியுமான டெஸ்டில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
ஆரம்பஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட்வோர்னர் –ரொஜெர் ஜோடி ஆரம்பம் முதல் அடித்துவிளையாடி வேகமாக ஓட்டங்களை குவித்ததுடன் முதலாவது விக்கெட்டிற்கு 200 ஓட்டங்களை பெற்றது.
அணி 200 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை 114 பந்துகளில் 14 பவுண்டர்pகள் அடங்கலாக 101 ஓட்டங்களை பெற்றிருந்த வோர்னர் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார், அதன் பின்;னர் 95 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் முகமட் சமியின் பந்துவீச்சில் ரொஜெர்ஸ் ஆட்டமிழந்தார்.
எனினும் பின்னர் சேன் வட்சன், அணித்தலைவர் ஸ்மித் இணைந்து 3 விக்கெட்டிற்காக பெற்ற 144 ஓட்டங்கள் காரணமாக அணி முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 348 ஓட்டங்களை பெற்றுள்ளது . வட்சன் 61 ஓட்டங்களுடனும், ஸ்மித் 81 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.