செய்திகள்

ஶ்ரீ.ல.சு.கவை பிளவு படுத்தியது நானனல்ல நான் கட்சியை பலப்படுத்தவே செயற்படுகின்றேன் : மஹிந்த

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தும் வகையிலேயே செயற்படுகின்றேனே ஒழிய கட்சியை பிளவுபடுத்தும் வகையில் தான் ஒரு போதும் செயற்படவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று கலாவெவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே மஹிந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரிக்கும் வகையில் நான் செயற்படுவதாக  சிலர் என்  மீது குற்றஞ்சாட்டுகின்றனர். நான் கட்சியை பலப்படுத்தவே வெளியில் வந்து கதைக்கின்றேன். கட்சியை பிளவுபடுத்துவதாக என் மீது குற்றம் சுமத்தி பலனில்லை. தாயிடமிருந்து மகள் பிரிந்து செல்லும் போதும் மகன் பிரிந்து செல்லும் போதும் நான் கட்சியிலேயே இருந்தேன் ,ஏன் செயலாளர் பிரிந்து செல்லும் போது  கூட நான் கட்சியிலேயே இருந்தேன். இதன்படி  கட்சியை பிளவுபடுத்தியது நான்  இல்லை’. என அவர் தெரிவித்துள்ளார்.