செய்திகள்

ஶ்ரீ.ல.சு.க உரிமையாளர் மைத்திரி அல்ல மக்களே : டீ.பீ.ஏக்கநாயக்க

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான உரிமையாளர்கள் நாட்டின் மக்களே தவிர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அல்ல எனவும் இதன்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை மக்களுடன் இணைந்து கட்சியை  முன்நோக்கி கொண்டுவருவார் என முன்னாள் அமைச்சர் டீ.பீ.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடுதற்கு வாய்ப்பு கிடைக்குமா என ஊடகமொன்றின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான உரிமையாளன் மைத்திரிபால சிறிசேன அல்ல  மக்களே அதன்  உரிமையாளர்கள். மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடனேயே இருக்கின்றனர். அவர்களுடன் மஹிந்த கட்சியை முன்னால் கொண்டு வருவார். என அவர் தெரிவித்துள்ளார்.