செய்திகள்

ஶ்ரீ.ல.சு.க பதவிகளிலிருந்து அநுர பிரியதர்ஷன , சுசிலை நீக்க தீட்டம்?

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அநுரபிரியதர்ஷன யாப்பா மற்றும் தேசிய அமைப்பாளர்  சுசில் பிரேம ஜயந்த ஆகியோரை அந்த பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகள் கட்சிக்குள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த முயற்சியின் பின்னணியில் அமைச்சரான எஸ.பி.திசாநாயக்கவே செயற்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அநுரபிரியதர்ஷன யாப்பாவும்  சுசில் பிரேம ஜயந்தவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகும் நிலையிலேயே அவர்கள் இருவரும் அந்த பதவிகளிலிருந்து நீக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.