செய்திகள்

ஶ்ரீ.ல.சு.க முன்னாள் எம்.பிக்கள் சிலருக்கு வேட்பு மனு இல்லை?

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காது போகலாம் என தெரிய வருகின்றது.
இவர்களில் கடந்த  துமிந்த சில்வா , சஜின்வாஸ் குணவர்தன மற்றும் மேர்வின் சில்வா ஆகியோரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இவ்வாறாக வாய்ப்பு கிடைக்காது போகும் உறுப்பினர்கள் இப்போதே தமது பிரதேசங்களில் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளதுடன் ஒரு சிலர் மஹிந்தவின் புகைப்படத்துடன் தனது புகைப்படத்தையும் இணைத்து பிரசார சுவரொட்டிகளை ஒட்டியிருப்பதனை அவதானிக்கக்கூடிதாகவுள்ளது.
இருப்பினும் ஶ்ரீ லங்க சுதந்திரக் கட்சி இன்னும் இது தொடர்பாக தீர்மானிக்கவில்லையெனவும் தற்போது வேட்பு மனுக்கள் தயார் செய்யப்படுவதாகவும் வேட்பு மனு தயாரிக்கும் குழு தெரிவித்துள்ளது.