செய்திகள்

ஷிராந்தி நிதி மோசடி பிரிவுக்கு செல்லவில்லை : சபாநாயகர் இல்லத்திலிருந்து விசாரணைக்கு முகம் கொடுத்தார்

முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்‌ஷ நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு செல்லாது சபாநாயகர் இல்லத்திற்கு சென்று அங்கிருந்து விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கு வாக்கு மூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை அவரை நிதி மோவடி விசாரணை பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்து நிலையில் காலை முதல் அங்கு அவரின் ஆதரவாளர்களும் மற்றும் ஊடகவியலாளர்களும் கூடியிருந்த நிலையில் அவர் அங்கு செல்லாது சபாநாயகரின் இல்லத்துக்கு சென்று அங்கிருந்து அதிகாரிகளின் விசாரணைக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிரிலிய சவிய என்ற பெயரில் காணப்படும் வங்கி கணக்கு தொடர்பாக விசாணை நடத்தும் வகையில் அவர் அங்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
00