செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் நால்வர் அரசிலிருந்து விலகல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் 4 பேர் அந்த பதவிகளை துறந்து அரசாங்கத்திலிருந்து விலகியுள்ளனர்.

டிலன் பெரேரா , பவித்ரா வன்னியாராச்சி , மகிந்த யாப்பா அபேவர்தன மற்றும் சீ.பீ.ரத்னாயக்க ஆகியோரே இவ்வாறு அரசாங்கத்திலிருந்து விலகியுள்ளனர்.

இவர்கள் தற்போது எதிர்கட்சி தலைவரின் அலுவலகத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி வருகின்றனர்.