செய்திகள்

ஸ்ரீ.ல.சு.கவை பிளவுபடுத்த விடமாட்டேன் : மைத்திரி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்த யாருக்கும் இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று நுவரெலியாவில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மாவட்ட பிரதிநிதிகள் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கட்சியை  பலவீனப்படுத்தி தேர்தலுக்கு சென்று ஒருபோதும் அரசாங்கத்தை அமைக்க முடியாது. இன்று சுதந்திரக் கட்சியை அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிளவுப்படுத்தி தனியான அணியொன்றை அமைப்போம் என்று கூறுவது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு செய்யும் துரோகமே.
எனக்கு யாரையும் கட்சியில் இருந்து நீக்கும் அல்லது ஒதுக்கும் நோக்கம் கிடையாது. என் மீது நம்பிக்கை வைத்து என்னிடம் கட்சியை ஒப்படைத்துள்ளீர்கள். இந் நிலையில் எல்லோரும் இணைந்து தேர்தலுக்கு சென்று அரசாங்கமொன்றை அமைப்போம்.
எவ்வாறாயினும் கட்சியை பலவீனப்படுத்தியும் பிளவுப்படுத்தியும் அரசியல் இலாபம் தேடுவதற்கு  யாரும் முயற்சிக்கலாம். எனினும்  கட்சியை பிளவுபடுத்த நான் யாருக்கும் இடமளிக்க மாட்டேன்” என அவர்தெரிவித்துள்ளார்.