செய்திகள்

ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியைச் சேர்ந்த 17 மாணவர்களுக்கு 9 A சித்தி

ஹட்டன், ஹைலண்ட்ஸ் கல்லூரியில், இம்முறை க.பொ.த. சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளின் அடைவு மட்டம் 96 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் 17 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ தர சித்திகளை பெற்றுள்ளதாகவும் கல்லூரியின் அதிபர் எஸ்.விஜேசிங் தெரிவித்தார்.

க.பொ.த.சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய 169 மாணவர்களுள் 162 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர். இவர்களுள் 161 மாணவர்கள் க.பொ.த உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

தமிழ்மொழி மூலம் தோற்றிய மாணவர்களுள், இரா.பிரணவன், சி.அக்ஷயகாந், அ.திசாந்தன், சு.லறோசன், ச.டிலுக்ஷான், பெ.கபிலஹர்ஷன், ப.சஹனா, சு.சினேகா, சி.கம்சிகா, வ.ஆரன்யா,ம.லக்ஷனா ஜெஹனி, இரா.சங்கீதா, செ.நிதர்ஷனா, ஜே.மியுலின், சே.யாதுரி, அ.ஜோன்நட்டாலி ஆகியோரும் ஆங்கிமொழி மூலம் தோற்றிய மாணவர்களுள் கு.திவ்யராகவி ஆகிய 17 மாணவர்களும் 9 பாடங்களில் அதிவிஷேட சித்திகளை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மேலும் 18 மாணவர்கள் 8 பாடங்களிலும் 12 மாணவர்கள் 7 பாடங்களிலும் 16 மாணவர்கள் 6 பாடங்களிலும் 11 மாணவர்கள் 5 பாடங்களிலும் அதிவிஷேட சித்திகளை பெற்றுள்ளனர். பரீட்சைக்கு தோற்றிய 169 மாணவர்களுள் 166 மாணவர்கள் 6 பாடங்களுக்கு மேல் சித்தி பெற்றுள்ளனர்.

கத்தோலிக்கம், கிறிஸ்தவம், இஸ்லாம், புவியியல், குடியியல், சங்கீதம், பரதம், தகவல் தொழிநுட்பம், சுகாதாரமும் உடற்கல்வியும் ஆகிய பாடங்களில் 100வீத பெறுபேறுகள் பெறப்பட்டுள்ளன சைவநெறி, தமிழ்மொழி, ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம், வரலாறு, வர்த்தகம், தமிழ் இலக்கியம், ஆகிய பாடங்களில் 90 வீதத்துக்கு அதிகமாகவும் அரபு, சித்திரம், ஆங்கில இலக்கியம் ஆகிய பாடங்களில் 80 வீதத்துக்கு அதிகமாகவும் பெறுபேறுகள் பெறப்பட்டுள்ளன.

இதேவேளை ஹட்டன் பொஸ்கோ கல்லூரியில் 89 மாணவா்களில் 45 மாணவா்கள் அதிதிறமை சித்தி பெற்று உயர்தரத்திற்கு தெரிவாகியுள்ளதாக பாடசாலை உப அதிபா் சங்கர் மணிவண்ணன் தெரிவித்தார்.