செய்திகள்

ஹரின் பெர்னான்டோ ஊவா மாகாணசபையின் முதலமைச்சராக பதவியேற்பு

harin

ஹரின் பெர்னான்டோ ஊவா மாகாணசபையின் முதலமைச்சராக சற்றுமுன்னர் உவா மாகாணசபை ஆளுனர் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.

முதலமைச்சராக இருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உறவினர் சசிந்திர ராஜபக்ச உவா மாகாணசபையில் அறுதிபெரும்பான்மை பலத்தை இழந்த நிலையில் அந்த இடத்திற்கு ஹரின் பதவி ஏற்றுள்ளார்.

ஹரின் பெர்னான்டோவே கடந்த உவா மாகாணசபை தேர்தலின் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சியின் மீள் எழுச்சிக்கு புத்துயிர் ஊட்டியவர் என்பது குறிபிடத்தக்கது.