செய்திகள்

ஹிட்டலர் தொடர்பான திலும் அமுனுகமவின் கருத்துக்கு ஜெர்மனி தூதுவர் பதில்

தேவைப்பட்டால் இலங்கை ஜனாதிபதி ஹிட்லராக மாறுவார் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம வெளியிட்டுள்ள கருத்துக்கு இலங்கைக்கான ஜெர்மனி தூதுவர் பதிலளித்துள்ளார்.

ஹிட்டலர் எந்தவொரு அரசியல்வாதிக்ளும் முன்மாதிரியாக இருக்க முடியாது என்று தூதுவர் கூறியுள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஹிட்லர் என்பவர் மில்லியன் கணக்கானவர்களின் மரணங்களுக்கும் துன்பங்களுக்கும் காரணமாக இருநதுள்ளார் என்பதனை தான் நினைவுப்படுத்துவதாக தூதுவர் கூறியுள்ளார்.

இதனால் அவர் யாருக்கும் முன்மாதிரியாக இருக்க முடியாது என்பதனை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். -(3)