செய்திகள்

ஹிருணிக்கா உட்பட 5 உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சி மத்திய குழுவுக்கு நியமனம்

அமைச்சர் அர்ஜூனா ரணதுங்க, மேல்மாகாண உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர உட்பட ஐவர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழுவுக்கு புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

முன்னாள் அமைச்சர் பந்துலகுணவர்த்தன உட்பட ஐந்து பேர் சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவிலிருந்து சனிக்கிழமை அதிரடியாக நீக்கப்பட்டனர். முன்னான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாகச் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இவர்கள் அதிரடியாக வெளியேற்றப்பட்டனர்.

இதனையடுத்து உருவாகியுள்ள வெற்றிடத்துக்கே ஹிருணிக்காக உட்பட 5 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.