செய்திகள்

ஹிஷாலினிக்கு நீதி வேண்டி எட்டியாந்தோட்டையில் பேரணி

ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிபுரிந்த நிலையில், தீ காயங்களுடன் உயிரிழந்த ஹிஷாலினிக்கு நீதிவேண்டி எட்டியாந்தோட்டை நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடத்தப்பட்டது.

முன்னாள் சபரகமுவ மாகாணசபை உறுப்பினர் அண்ணாமலை பாஸ்கரனின் ஏற்ட்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எட்டியாந்தோட்டை புனித மரியாள் தேவாலயத்திற்கு அருகில் இருந்து நகரின் மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டுக் கோபுர சந்தி வரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பொதுமக்களும், சிவில் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டதுடன், நீதியான விசாரணைகளை மேற்கொண்டு சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுடன், சிறுமிக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
-(3)