செய்திகள்

ஹேமசிறி பெர்னாண்டோ – பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக 800 குற்றச்சாட்டுகளுடன் குற்றப் பத்திரங்கள் தாக்கல்!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக சட்டமா அதிபரினால் 800 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மனித கொலைகள், கொலை முயற்சிகள் மற்றும் மக்களுக்கான ஆபத்துகள் குறித்து கவனம் செலுத்தாமை மற்றும் ஈஸ்டர் தடுக்கத் தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

விசேட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அந்தக் குற்றப்பத்திரங்கள் தொடர்பாக வழக்கு விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)