செய்திகள்

ஹோல்டரின் கிரிக்கெட் வாழ்விற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ள டிவிலியர்சின் 162

பல வருடங்களிற்கு முன்னர் கிரிக்கெட் உலகில் இடம்பெற்ற விடயமிது. அவ்வேளை நெருக்குதலுக்குள்ளாகியிருந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஆறு போட்டிகள் கொண்ட ஆசஸ் தொடரிற்கு அணியின் தலைவராக இளம் வீரர் கிரஹாம் யலப்பை நியமித்தது. அவரிடம் அணியின் வெற்றி வாய்ப்புகள் குறித்து கேள்வி எழுப்பிய வேளை அவர் ஆறு டெஸ்ட்களையும் வெல்வோம் என்றார்.ஆனால் 5-1 என்ற அடிப்படையில் இங்கிலாந்திடம் தோற்றார். ஆதன் பின்னர் அவர் பலிகொடுக்கப்பட்ட ஆட்டுக்குட்டிகள் என அந்த தொடர் குறித்து எழுதினார்.

இந்த உலககிண்ணப்போட்டிகளில் மேற்கிந்திய அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டரும் இதே நிலைமையிலேயே உள்ளார். மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கும் அணி வீரர்களுக்கும் இடையில் உருவான சர்ச்சையை தொடர்ந்து தீடிரென ஹோல்டர் அணித்தலைவராக்கப்பட்டார்.இதனால் திறமையுள்ள சகல துறை ஆட்டக்காரர் ஹோல்டரின் கிரிக்கெட் வாழ்க்கை பாதிப்பை சந்திக்க கூடிய அபாயம் உருவாகியுள்ளது.

207137

ஸ்டீவன் ஸ்மித்தை 2011 ஆசஸ் தொடரின்போது அணித்தலைவராக நியமித்திருந்தால் என்ன நடைபெற்றிருக்கும் என நினைத்து பாருங்கள்.

ஹோல்டரின் நிலைமைகுறித்து தென்னாபிரிக்க அணித்தலைவரிற்கு அனுதாபம் இருந்தாலும் கூட அவர் அதனை மைதானத்தில் வெளிப்படுத்த தயாரில்லை. இந்தியாவுடனான தோல்வியின் மூலம் ஏமாற்றமடைந்திருந்தடிவில்லியர்ஸ் மேற்கிந்தியஅணியின்பந்துவீச்சை சிதறடித்தார். சில வாரங்களுக்கு முன்னர் பாக்கிஸ்தானிற்கு எதிராக அவர் காட்டிய மூர்க்கத்தனத்தைமீண்டும்அவர் வெளிப்படுத்தினார்.66 பந்துகளில் 162 ஓட்டங்களை பெற்றார் இதில் 8 சிக்சர்களும் 17 பவுணடரிகளும் அடங்கும்

மேற்கிந்தியஅணியின்தவைரின் வேகப்பந்து வீச்சையேஅதிகம்இலக்குவைத்து அதனை முற்றாக சிதைத்தது குறித்து அவர் கவலைப்படவில்லை.  ஹோல்டர் 10 ஓவர்களில் 104 ஓட்டங்களை கொடுத்திருந்தார் ஆடுகளத்திலிருக்கும் போது நீங்கள் இது குறித்து நினைக்கமுடியாது,அவர் ஓரு சிறந்த நபர்,நாங்களும் இவ்வாறான சில சந்தர்ப்பங்களில் இருந்திருக்கின்றோம்,ஓவ்வொரு அணித்தலைவரும்இவ்வாறான நெருக்கடியானதருணத்தைசந்திக்க வேண்டி வரும்,இன்று அவருக்கு மிகவும் கடினமான நாள்,இந்தியாவுடனான போட்டி எங்களுக்கு இவ்வாறே கடினமானதாக விளங்கியது,ஹோல்டர்இதனை சமாளிக்கும்அளவிற்குமனமுதிர்ச்சியுள்ளவர் என கருதுகிறேன், அவரிற்கு ஆலோசனை வழங்க அணியில் மூத்த அனுபவசாலிகள் உள்ளனர் என டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

வீரர்கள், கட்டுப்பாட்டுச் சபையுடனான மோதலின் காரணமாக அணிக்காக தன்னை 100 வீதம் அர்ப்பணிக்கும் நிலையிலுள்ள வீரர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாத நிலையில் ஹோல்டர் காணப்படுகின்றார்.கடந்த போட்டியில் இரட்டை சதம்அடித்த கெயிலிடமிருந்து எவரும் இந்த போட்டியில் அதிகம் எதிர்பார்க்கவில்லை.சிம்மன்ஸ் துரதிஸ்டவசமாகஆட்டமிழந்தார். துடுப்பில் பட்டு கால்காப்பில் பட்ட பந்திற்கு நடுவர் எல்பிடபில்யூ என அறிவிக்க அந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யாமல் வெளியேறினார் அவர்.

அணித்தலைவர் என்ற அடிப்படையில் ஹோல்டர் தனது திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதும் புலனாகியது. சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமானது போல காணப்பட்ட ஆடுகளத்தில் அவர் கெயிலையும், சாமுவேல்சையும் அதிகம் பயன்படுத்தவில்லை. டிவில்லியர்சினை கட்டுப்படுத்த முடியாமல் திணறியதால் எதிர்மறையாக சிந்தித்தார்.

தென்னாபிரிக்காவின் 408 ஓட்டங்களுக்கு பதிலளிக்க தொடங்கிய வேளையே மேற்கிந்திய அணி வீரர்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் போல தோன்றினார். மைதானத்திலிருந்த இரசிகர்கள் மேற்கிந்திய அணி எவ்வாறு இந்த நிலைக்கு தள்ளப்பட்டது என சிந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.பலர் போட்டி முடிவடையுமுன்னரே மைதானத்திலிருந்து சென்றுவிட்டனர்.

207121மேற்கிந்திய அணியின் மூத்த வீரர்களும், கட்டுப்பாட்டுச்சபையும் சிந்திக்க வேண்டிய விடயமொன்றுள்ளது. கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பத்திலுள்ள ஹோல்டர் போன்ற ஓரு வீரர் மீது இவ்வளவு அளவுக்கதிகமான அழுத்தங்களை சுமத்தலாமா என்பதே அது. அவரது திறமை பாதிக்கப்பட்டால் ஹோல்டரை குற்றம் சொல்ல முடியாதுஅவரை சுற்றியுள்ளவர்களையும் அவரை பலிகொடுக்கப்படும் ஆட்டுக்குட்டியாக பயன்படுத்தியவர்களையும் குற்றம் சொல்ல வேண்டும்.