செய்திகள்

ஐஓசி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் விநியோகம்!

லங்கா ஐஓசி நிறுவனம் தமது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோல் விநியோகத்தை மட்டுப்படுத்த  நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் விநியோகம் 1,500 ரூபாவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், முச்சக்கரவண்டிகளுக்கு 2,500 ரூபாவாகும், மோட்டார் வாகனங்களுக்கு 7,000 ரூபாவாகவும் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருளை விநியோகித்து வருகின்றது.

-(3)